ஏன் இப்படி பண்றீங்க…? பெண்ணிடம் அத்துமீறிய நபர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண்ணை அவதூறு வார்த்தைகளால்  திட்டி, தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கோரியம்பட்டி பகுதியில் தவசீலன் செந்தமிழ்ச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக குழி வெட்டியுள்ளனர். இவர்கள் குழி வெட்டியதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் என்பவர் செந்தமிழ் செல்வியை அவதூறு வார்த்தைகள் கூறி திட்டியுள்ளார். மேலும் செந்தில்குமார் செந்தமிழ் செல்வியை தாக்கியும் உள்ளார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டான் காவல் நிலையத்தில் செந்தமிழ்ச்செல்வி புகார் அளித்துள்ளார். அந்த  புகாரின் பேரில் காவல்துறையினர் செந்தில்குமாரின் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *