பெண்களை வெறுக்கும் ஆண்களின் குணங்கள் இப்படி தான் இருக்கும்..!!

பெண்களை வெறுத்தும், மரியாதையை இல்லாமலும் பேசும் ஆண்கள் இந்த குணங்களை தான் அடிப்படையாக கொண்டிருப்பார்கள்.

ஆண்-பெண் உறவுகளில் எப்பொழுதும் முக்கியமாக இருக்க வேண்டும் என்பது சுயமரியாதை ஆகும். ஏன் என்றால் சுயமரியாதையை பாதிக்கும் எந்த உறவும் நல்ல உறவாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை.  ஆணாக பிறந்த ஒரே காரணத்தினால் பெண்களை விட நான்தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் ஆண்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா.?

தன்னுடைய பாலினத்தால் மட்டுமே தன்னை உயர்ந்தவராக நினைக்கும் ஆண்கள் ஒருபோதும் சிறந்த காதலனாக இருக்க முடியாது. இதுபோன்ற ஆண்கள் பெண்களை வெறுப்பவர்களாகவும், தங்களின் தேவைகளுக்கு மட்டும் அவர்களை பயன்படுத்திக் கொள்பவராகவும் இருப்பார்கள். இப்படிப்பட்ட ஆண்களை அவர்களுடன் பழகத் தொடங்கும் போதே அவர்களின் செயல்களை வைத்து கண்டறிந்து விடலாம்.

பெண்களை வெறுக்கும் ஆண்களின் அறிகுறிகள்:

பெண் நண்பர்கள் இருக்கமாட்டார்கள், பெண் நண்பர்கள் இல்லாத ஆண்களை நீங்கள் முதலில் பார்க்கும் போது அவர்கள் மிகவும் நல்லவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஒருவேளை அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் இப்படி இருக்க மற்றொரு வாய்ப்பும் உள்ளது. அவர்களின் ஆணாதிக்கத்தால் எந்த பெண்ணும் அவருடன் பழக விரும்பாமல் இருக்கலாம். பெண்களை மதிக்காமல் இருக்கும் குணத்தை எந்த பெண்ணும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

உங்கள் உணர்ச்சிகளை உங்களுக்கு எதிராக பயன்படுத்துவது நீங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது உங்களை பைத்தியம் என்றோ அல்லது பலவீனமானவர்கள் என்றோ கூறுபவர்கள் சரியான ஆண்களாக இருக்க வாய்ப்பேயில்லை. அவர்கள் உங்களின் பாதுகாப்பற்ற தன்மையை உங்களுக்கு நிரூபிக்கவும், அவரது வலிமையையும் மேன்மையையும் காட்டவும் அவர் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவார்கள்.

மற்ற பெண்களைப் பற்றி மோசமாக பேசுவது, மற்ற பெண்களிடம் பற்றி உங்களிடம் பேசும் போதெல்லாம் மோசமான சொற்களை கூறி பேசுவார்கள். தனது முன்னாள் காதலிகளை பற்றி அருவருக்கத்தக்க கருத்துக்களை சொல்வது. உங்களை அவர்கள் அவமதிக்கவில்லை என்று சதோஷப்படாதீர்கள், நாளை உங்களுக்கும் அந்த நிலை வரலாம். குறிப்பாக அவரின் தாய் மற்றும் சகோதரிகளை அவர் எப்படி நடத்துகிறார் என்று கவனியுங்கள்.

அனைத்து வாய்ப்பிலும் உங்களை மட்டம் தட்டுவது, பெண்களை வெறுக்கும் மனிதன் பொதுவாக அனைத்திலும் தன்னை பெண்ணை விட உயர்ந்தவராக நினைப்பார்கள். எனவே அதனை நிரூபிக்க தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். இந்த பையன் தொடர்ந்து உங்களை குறைத்து மதிப்பிடுவார், மேலும் உங்கள் தகுதியை நீங்கள் கேள்விக் குள்ளாக்குவதை உறுதி செய்வார்.

பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு பையன் ஒரு பெண்ணை வெறுப்பவனாக இருந்தால், அவன் தன் வார்த்தைகளுக்கோ, செயல்களுக்கோ தன்னை ஒருபோதும் குற்றவாளி என்று ஒப்புக்கொள்ள மாட்டான். அவர்கள் செய்த தவறை நீங்கள் சுட்டிக் காட்டினாலும் அதனை செய்ய நீங்கள் தான் அவர்களைத் தூண்டினீர்கள் என்று அவர்கள் உங்கள் மீதே குற்றம்சாட்டுவர்கள். அவர் ஒருபோதும் பொறுப்பேற்க மாட்டார். எப்போதும் அவரது அசிங்கமான நடத்தைக்கு பொருத்தமான காரணத்தைக் கண்டுபிடிப்பார்.

நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கட்டளையிடுவது, இப்படிப்பட்ட ஆண்களை பொறுத்தவரை இவர்கள் தான் பூமியிலேயே புத்திசாலிகள் என்றும் உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சிக்க இவர்களுக்கு உரிமை என்றும் உங்களை விட அனைத்தையும் அவர்கள் சிறப்பாக செய்ய முடியும் என்றும் இவர்கள் உங்கள் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் நீங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி வாழ வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்திற்கும் கட்டளை இடுவார்கள்.

உங்கள் வெற்றியை நினைத்து அச்சமடைவார்கள். பெண்களை வெறுக்கும் ஆண்கள் பொதுவாக இலட்சியமிக்க மற்றும் வெற்றிகரமான பெண்களை அதிகம் வெறுப்பார்கள். எனவே இப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் தன்னைவிட தாழ்ந்த பெண்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். பெண்களை வெறுக்கும் ஆண்கள் ஒருபோதும் பெண்களை பாராட்டவோ அல்லது உற்சாகப்படுத்தவோ மாட்டார்கள். உங்களின் திறமைகளை எப்பொழுதும் அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.  மாறாக உங்களின் திறமைகளை மட்டம் தட்டவே முயற்சிப்பார்கள்.

உங்கள் நேரத்தை மதிக்க மாட்டார்கள். பெண்களை மதிக்காத ஆண்கள் அவர்களுடைய நேரத்திற்கு மதிப்போ, முக்கியத்துவமா கொடுக்கமாட்டார்கள். அவர்களின் நேரத்தை விட தனக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவர்களின் துணையை நீங்கள் எப்போதும் எதிர்பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த மாதிரி ஆண்கள் உங்கள் வாழ்க்கையில் வந்தால் துளி அளவு கூட சிந்திக்காமல் விலகி விடுங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *