“பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம்”…. இனி எல்லாமே மாறப்போகுது…. புது ரூல்ஸ்….!!!!

ஆப்கானிஸ்தானில் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய தலிபான்களின் அமைப்பானது தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் தலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அதாவது பெண்கள் உயர்கல்வி கற்பது, ஆடை கட்டுப்பாடு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் ஆட்சி விதித்துள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில்  பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது நடைமுறையில் இருந்து வந்தது.

இந்நிலையில் அந்நாட்டில் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய தலிபான்கள் அமைப்பு தடை விதித்துள்ளது. மேலும் கணவர் இறந்தால் அவரது விதவை மனைவிக்கு கணவர் சொத்தில் பங்கு உள்ளது என்றும் தலிபான்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஷபிஹுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *