இக்காலத்தில்…பெண்களை அதிகம் பாதிக்கும் நோய் இதுவே…! தடுக்கும் முறைகள்!

சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், சருமம் வெளிறிப்போய்க் காணப்படுவது, இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறது என்றால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்.

இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கிறதாம். இந்த குறைபாடு நாளடைவில் ரத்தசோகையில் கொண்டுபோய்விடுகிறது. இது  பெரும்பாலும் திருமணத்திற்கு பின்  பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.  எனவே …

எதுவாயினும் வருமுன் காப்பதே சிறந்தது, உங்களுக்கு தேவையான சத்துக்களை ஊட்டச்சத்து மிக்க உணவான பழங்கள் ,பயிர்வகைகள் போன்ற இயற்கை முறையில் பெறுவது சிறந்தது.

 

அதிகமாக சோர்வு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் இரும்பு சத்து குறைபாட்டை தவிர்க்கும் உணவு வகைகள்…!

  • பசலைக்கீரை மற்றும் கேல் கீரையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் தவறாமல் சாப்பிட வேண்டும்.
  • கோழி மற்றும் மீன் உணவுகளில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக சால்மன் மற்றும் டூனா போன்ற மீன்களில் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது.
  • முட்டையில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இயற்கையாகவே நிறைந்துள்ளன.
  • சைவ உணவாளர்களுக்கு பருப்பு வகைகளில் அதிகமாக இரும்பு சத்து நிரம்பியுள்ளது. எனவே பருப்பு வகைகளை சாலட் வடிவிலோ அல்லது தால் போன்றோ சமைத்து உட்கொள்ளலாம்.
  • வைட்டமின் “சி” உள்ள சிட்ரஸ் பழங்களில் இரும்பு சத்து குறைபாட்டை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • நட்ஸ் மற்றும் விதைகளில் இரும்புச் சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. இவற்றை எண்ணெயில் வறுத்து, உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
  • இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் டீ மற்றும் காபி அதிகளவில் குடிப்பதை தவிர்க்கவும். குறிப்பாக உணவு உண்ட பிறகு டீ, காபி குடிக்கக் கூடாது, வேண்டுமானால் 2 மணி நேரத்திற்க்கு பிறகு குடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *