செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண் ஆன்லைனில் இழந்த ரூ.1 லட்சம் பணத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டனர்.

தூத்துக்குடி பகுதியில் ஜெபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்தியின் செல்போனுக்கு வங்கி தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்த ஆனந்தி அந்த குறுஞ்செய்தியில் இருந்த ஆன்லைன் இணைப்பில் சென்று தனது வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் ஆனந்தியின் வங்கி கணக்கிலிருந்து பணம், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் பிளிப்கார்ட் நிறுவன அதிகாரியை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆனந்தியின் பணத்தை மீண்டும் வங்கி கணக்கிற்கு அனுப்ப அறிவுறுத்தினர். இதனால் பிலிப்காட் நிறுவனத்திலிருந்து மீண்டும் ரூ.1 லட்சம் பணம் ஆனந்தியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுவதாவது, பொதுமக்கள் தங்கள் செல்போனுக்கு வரும் தேவையில்லாத லிங்குகளை திறக்க வேண்டாம் என்றும், வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *