“இரை தேடி சென்ற மயில்கள்” குருணை வைத்து கொன்ற விவசாயிகள்….. கைது செய்த போலீஸ்….!!!

மயில்களை விஷம் வைத்து சாகடித்த விவசாயிகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே அரசுக்கு சொந்தமான காப்புக் காடுகள் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள் மற்றும் பறவைகள் வசித்து வருகின்றன. குறிப்பாக  மயில்கள் அதிக அளவு காணப்படும். இந்நிலையில் இரை தேடி விவசாய நிலங்களுக்கு மயில்கள் செல்வதால் அதனை கட்டுப்படுத்த விவசாயிகள் தானியத்தில் விஷத்தை கலந்து வைத்து கொன்று வருவதாக வனத்துறையினருக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனையடுத்து  காட்டுப்பகுதியில் 11 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கள்ளக்குறிச்சி வனசரக அலுவலருக்கு தகவல் சென்றது.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த 11 அவர்களின் உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் தர்மலிங்கம், சுப்ரமணியன் என்ற விவசாயிகளின் மக்காச்சோள பயிர்களை மயில்கள் சேதப்படுத்தி வந்ததால் அதனை கட்டுப்படுத்த குருணை மருந்து கலந்த தானியத்தை நிலத்தில் வைத்துள்ளனர்.

இதனை சாப்பிட்டால் மயில்கள் ஓடையில் இறந்து கிடந்துள்ளன என்பதும் விசாரணையின் போது தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினர் சுப்பிரமணியன் மற்றும் தர்மலிங்கத்தின் கைது செய்துள்ளனர். அதோடு நாட்டின் தேசியப் பறவையான மயில் முருகப் பெருமானின் வாகனமாக கருதி இந்துக்கள் அதனை வழிபட்டு வருகின்றனர். மேலும் தைப்பூச திருநாளன்று மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *