கலைஞரின் சொந்த ஊரில் அமைதி பேரணி… 1000க்கும் மேற்பட்ட மக்கள் மௌன அஞ்சலி..!!

கலைஞரின் முதலாமாண்டு நினைவு நாளான இன்று அவர் பிறந்த ஊரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.

தமிழகத்தின்  அரசியல் அச்சாணியாக திகழும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி அநடைபெற்று வருகிறது. 

Image result for கலைஞர் அமைதி பேரணி

இந்நிலையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்த இடத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்திய மக்கள், அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். திமுக செயற்குழு உறுப்பினரும், திருக்குவளை அஞ்சுகம் அம்மையார் அறக்கட்டளை தலைவருமான இளம் மேகநாதன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்