பயணியுடன் காரை கடத்திய வாலிபர்…. இரண்டு மணி நேரம் சேஸிங் செய்து மடக்கிய காவல்துறை….!!

டெல்லியில் பெண் பயணி உடன் சேர்ந்து காரைக் கடத்திச் சென்ற நபரை இரண்டு மணி நேரம் சேஸிங் செய்து காவல் துறையினர் பிடித்துள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

டெல்லியை சேர்ந்த கார் ஓட்டுனராக அகமத் என்பவர் கடந்த புதன்கிழமை அன்று உடல் நலம் சரியில்லாத ஒரு பெண் பயணியை காரில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில் டெல்லியின் வடக்குப்பகுதியில் இருக்கின்ற காந்தி விகார் எரிபொருள் நிலையத்தின் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, பயணிக்காக  நீர் வாங்குவதற்கு காரைவிட்டு இறங்கி சென்றுள்ளார். அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் அகமதை பயங்கரமாக தாக்கி விட்டு காரில் இருந்த பயணியுடன் காரை கடத்தி சென்று இருக்கிறார். கடத்தல்காரரை பார்த்தவுடன் பெண் பயணி அளறியுள்ளார். இதனை தொடர்ந்து அகமத், அப்பகுதியில் சாலை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பவன் மற்றும் அனில் ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

மேலும் கடத்தல்காரர், புராரிப் பகுதியை நோக்கி தப்பிச் சென்றதாக கூறி இருக்கிறார். இதனையறிந்த வஜ்ராபாத் காவல்துறையினர் கடத்தப்பட்ட காரை சேஸ் செய்தனர். அதே சமயத்தில் இந்த தகவல் தீர்பூர் சாலை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இரண்டு காவல் குழுவினரும் காரை சேஸ் செய்தனர். சுமார் இரண்டு மணி நேர சேஸிங்கிற்கு பின்னர் கடத்தப்பட்ட காரை காவலர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். காவலர்கள் தன்னை மடக்கி அதை உணர்ந்த கடத்தல்காரர் அங்கிருந்து தப்பி செல்வதற்கு முயற்சி செய்துள்ளார்.அப்போது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையில், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 28 வயதுடைய பிரசாத் சர்மா என்பதும் அவர் டெல்லி மஹிந்திரா பூங்கா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *