3 நாட்கள் கெடு ”ரூ 87,50,00,000 வேணும்” எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ்…!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி நிலத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிக்கு நிலத்திற்கான நிலுவைத் தொகையை வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக அரசு 1992_ஆம் ஆண்டு ஹிண்டியில்  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கட்ட 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது.இந்த நிலத்தை கிரயம் செய்ய தமிழக அரசு உரிய தொகையை கட்டி இருக்க வேண்டும்.

மாநில அரசின் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு நிலம் மாற்றப்படும் போது அதற்கு உரிய தொகையை மாநில அரசுதான் செலுத்த வேண்டும்.ஆனால் தமிழக அரசு உரிய தொகையை கட்டாததால்  87.5 கோடி நிலுவைத்தொகை உள்ளதாகவும், அந்த  தொகையை வரும் 15_ஆம் தேற்றத்திக்குள் செலுத்த வேண்டுமென்று மாநில வருவாய் நிர்வாகம் பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருவாய் நிர்வாகம் தெரிவித்துள்ள 15-ஆம் தேதிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.