“போதிய படுக்கை வசதி இல்லை” போராட்டத்தில் ஈடுபட்ட உள் நோயாளிகள்…. மருத்துவமனையில் பரபரப்பு….!!!

தூத்துக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில்  உள் நோயாளிகளாக ஆண், பெண் என 400-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆண்கள் உள் நோயாளிகள் பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லை. ஆகவே உள் நோயாளிகள் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுக்கை வசதி செய்து தர கோரி நகர சபை கவுன்சிலர் மற்றும் அப்துல் கலாம் ரத்ததான கழக தலைவர் ஆகியோர் தலைமையில் திடீர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அகஸ்தியன், டாக்டர் ஸ்ரீ வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பழைய பெண்கள் பிரசவ வார்டில் சுகாதார வசதிகள் செய்து ஓரிரு நாட்களில் படுக்கை வசதிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று மருத்துவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட உள் நோயாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.