“பதான்” படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை…. திடீரென்று பின் வாங்கிய வி.எச்.பி…. இதுதான் காரணம்?….!!!!!

சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று (ஜன,.25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடையணிந்து கவர்ச்சி நடனமாடி இருந்ததை இந்து அமைப்பினர் எதிர்த்தனர்.

மேலும் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதோடு ஷாருக்கான் கொடும்பாவியும் எரிக்கப்பட்டு, தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பதான் பட பேனர்களையும் கிழித்து எறிந்தனர். இவ்வாறு வந்த எதிர்ப்பை அடுத்து பதான் திரைப்படத்தை மறுதணிக்கை செய்து சர்ச்சை காட்சிகளை நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பதான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்று விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் கூறியதாவது, இந்த படத்தில் செய்த மாற்றங்களால் அமைப்பினர் மகிழ்ச்சியில்  இருக்கின்றனர். இதனால் போராட்டம் நடத்தும் முடிவை வாபஸ் பெற முடிவாகி இருக்கிறது என கூறியுள்ளார்.

Leave a Reply