“பதான்” படம்…. அவங்கள நல்ல முறையில் காட்டியிருக்காங்க?…. நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம்….!!!!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். பதான் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாக பல சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் அதுவே அப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது. தற்போது நடிகையான கங்கனா ரனாவத் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “இப்படத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பாகிஸ்தானை நல்ல முறையில் காட்டியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

அதோடு பதான் படம் வெறுப்பை வீழ்த்திய அன்புக்கு கிடைத்த வெற்றி என்று கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் யாருடைய வெறுப்பின் மேல் யாருடைய அன்பு வெற்றி பெற்றது..? டிக்கெட்டுகளை வாங்கி இந்த படத்தை வெற்றியடைய செய்வது யார்..? அதுவே அனைவரையும் உள்ளடக்கிய தன்மையோடு, 80% இந்துக்கள் வாழும் இந்தியாவின் அன்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.