“எனக்கு ஒட்டு போடு , இல்லாட்டி போ” ஈரோட்டில் சீமான் பேச்சு….!!

எனது கட்சிக்கு ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்று சீமான் ஈரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

 

விரட்டி அடிக்க வேண்டும்

 

நாம் தமிழர் கட்சி சார்பில் 40 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 ஆண் மற்றும் 20 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஈரோட்டில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது , தேர்தல் நடைபெறும் நேரத்தில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பறக்கும் படையா அல்ல பணம் பறிக்கும் படையா?என்று கேள்வி எழுப்பினார்.