” கட்சி சொன்னால் போட்டியிடுவேன் ” தமிழிசை பேட்டி…!!

கட்சி தலைமை சொன்னால் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் என்று பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து பாரதீய ஜனதா கட்சி தேர்தலை சந்திக்கிறது . பாஜக_வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு , போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Image result for தமிழிசை

இந்நிலையில் பாஜகவின் பார்லிமென்ட் போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்ள டெல்லி சென்ற போது சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக_வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறுகையில் , எங்கள் கட்சி சொன்னால் நான் போட்டியிடுவேன் . போட்டியிட வாய்ப்பு உள்ளது கட்சி எந்த தொகுதியில் சொல்கிறதோ அந்த தொகுதியில் நான் வேட்பாளராக போட்டியிடுவேன் என்று கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் , ராகுல் காந்தி ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் என்று சொல்லுகிறார் .  ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவேன் என்று கூறுகிறார். ஸ்டாலின் சொல்றது எல்லாமே தமிழ்நாட்டில் உள்ள கூட்டத்தில் தான் சொல்கிறார் தமிழ்நாட்டை விட்டு வெளியே போன்ற எந்த எந்த இடத்திலும் ஸ்டாலின் ராகுலை பிரதமர் ஆக்குவேன் என்று சொல்லவில்லை அதனால் எதுவுமே   நடக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை  என்று தெரிவித்தார்.