உயிரிழந்த ராணுவ வீரர் உடலில் கட்சி கொடி…. பாஜக கடும் கண்டனம்…!!

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் மீது பிஜு ஜனதா தளம் கட்சிக்கொடி போர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

சமீபத்தில் புல்வாமாவில் பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தினர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் அஜித் சாகோ பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான படாசோனாலோவில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவருடைய உடலுக்கு மரியாதையை செலுத்த அம்மாநில ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் நிர்வாகிகள் , அமைச்சர்கள் வருகை தந்தனர்.

அப்போது ராணுவ வீரரின் உடல் மீது  போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு பிஜு ஜனதா தளம் கட்சி கொடி  போர்த்தப்பட்டது. இதன் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பரவி  அரசியல் கட்சியினரின் கண்டனத்துக்குட்பட்டு வருகின்றது. இது குறித்து பாஜகவினர் கண்டனம் தெரிவித்ததுடன் இந்த செயல் ராணுவ வீரரை அவமரியாதை செய்யும் செயல்.இதற்க்கு  பிஜு ஜனதா தளம் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்.  இதற்க்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது .