இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை தூண்டும் சீனா… இந்திய உளவுத்துறை தகவல்..!!

காஷ்மீரில் வன்முறையை தூண்டுமாறு பாகிஸ்தானை சீனா அறிவுறுத்தி இருப்பதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானும், லடாக் எல்லையில் சீனாவும், இந்தியாவுக்கு பெரும் தொல்லைகள் கொடுத்து வருகின்றன. அண்மையில் லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறலுக்கு இந்திய தகுந்த பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் இந்தியாவை மறைமுகமாக சீண்டும் விதமாக காஷ்மீர் பகுதியில் வன்முறை சம்பவங்களை அதிகரிக்க பாகிஸ்தானை சீனா கேட்டுக் கொண்டுள்ளதாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய உளவுத்துறை அதிகாரிகள் காஷ்மீரில் தீவிரவாதத்தை முன்னெடுக்க சீனா பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு உதவி வருவதாக கூறியுள்ளது. அண்மையில் காஷ்மீரில் சீன நாட்டு ட்ரோன்களும், ஆயுதங்களும் அதிகளவு கைப்பற்றப் படுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *