“ரூ 10,000 த்தை திருப்பி கொடுக்காத பெற்றோர்” 2 வயது சிறுமி கொடூர கொலை…. நாடு முழுவதும் அதிர்ச்சி…!!

அலிகாரில் 10,000 ரூபாய் பணத்தை பெற்றோர் திருப்பி தராததால் 2 வயது சிறுமி டுவிங்கிள் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில்வசித்து வரும் பன்வாரிலால் சர்மா என்பவருக்கு டுவிங்கிள் சர்மா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த மே மாதம் 31-ம் தேதி திடீரென காணாமல் போனது. உடனே குழந்தை மாயமானதை பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தையின் முகம் யாரென்று அடையாளம் தெரியாத அளவிற்கு கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Image

இதையடுத்து குழந்தையை கொன்ற குற்றவாளிகள் ஜாகித் மற்றும் அஸ்லாம் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்ததில் குழந்தையை தாங்கள் கொன்றதாக ஒப்புக் கொண்டனர். சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக குழந்தையின் பெற்றோர் ஜாகித்திடம் 10,000 ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர். அதை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் தான் குழந்தையை கடத்தி கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றவாளிகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிப்பதற்கு  உ.பி. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *