“விண்ணப்பம் வழங்குவதில் பாரபட்சம் ,தனியார் பள்ளியை முற்றுகை செய்த பெற்றோர்கள் “விருதுநகரில் பரபரப்பு !!…

விருதுநகரில் தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரே அரசு உதவி பெறும் தனியார் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற இரவு முழுவதும் நீண்ட வரிசையில்  பெற்றோர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை செய்தனர்.


இதனையடுத்து மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர்களில் சிலர் மூடப்பட்ட பள்ளியின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைய முயற்சி செய்தனர். ஆனால் பள்ளியில் பணிபுரிந்த ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதை அடுத்து பெற்றோர்கள்  பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.