“இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டிய பெற்றோர்”…. கல்லறையில் க்யூஆர் கோடு பதித்து நெகிழ்ச்சி…!!!

கேரள மாநிலம் திருச்சூர் புரத்தை சேர்ந்த ஐவின் பிரான்சிஸ் (26) என்ற இளம் மருத்துவர் கடந்த 2021-ம் ஆண்டு பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஐவின் பிரான்சிஸ் படிப்பில் மட்டுமின்றி இசை மற்றும் விளையாட்டு என அனைத்திலும் சிறந்து விளங்கினார்.

இவரின் மறைவை பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அவரின் அக்காவின் யோசனையின்படி ஐவின் கல்லறையில் க்யூ ஆர் கோடு பதித்துள்ளனர். இதன் மூலம் அவரை நினைவுகளுக்கு பெற்றோர் உயிரூட்டி உள்ளனர். மேலும் இறந்த மகனின் நினைவுகளை அனைவரும் அறியும் விதமாக பெற்றோர் க்யூ ஆர் கோடு வைத்துள்ளது கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.