பாராஒலிம்பிக் : பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் அசத்தல் …. இறுதிபோட்டிக்கு முன்னேறினார் கிருஷ்ணா நாகர் ….!!!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின்  கிருஷ்ணா நாகர் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார்.

16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வருகின்றன. இதில் இன்று காலை நடைபெற்ற பேட்மிட்டண்  போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரமோத் பகத் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதை அடுத்து நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மனோஜ் சர்கார் தோல்வியடைந்ததால்  வெண்கலப் பதக்கத்துக்கான  போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் .இதைத் தொடர்ந்து ஆடவருக்கான எஸ்.எல்.4 பிரிவு ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் இந்தோனேசியாவை சேர்ந்த ஃபிரட்டியை  எதிர்த்து மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சுகாஷ் யத்திராஜ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார் .இதனால் பேட்மிட்டனில்   இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு நடந்த எஸ்.ஹெச் 6 பிரிவுஅரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் இங்கிலாந்தை சேர்ந்த கூம்ஸ் கிரெஸ்டனை எதிர்த்து மோதினார் .இதில் 21-10,    21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற கிருஷ்ணனா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதனால் பேட்மிட்டனில்  இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *