திடீரென வெளியேறிய கரும்புகை…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

பஞ்சு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரம் பல பாளையம் பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பஞ்சு குடோனை மங்கலம் பகுதியில் வசிக்கும் ஜெய்வுலாதீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் குடோனில் யாரும் வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சற்று நேரத்தில் குடோன் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பல்லடம் மற்றும் சோமனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மங்கலம் காவல்துறையினர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *