சுவை மிகுந்த… பொரிகடலை பணியாரம்…!!

தேவையான பொருட்கள்

பொரிகடலை                    –   1/2 கிலோ

தேங்காய்                            –   1

சீனி                                        –   250 கிராம்

முந்திரி                                 –   100 கிராம்

ஏலக்காய்த்தூள்              –   2 டேபிள்ஸ்பூன்

நெய்                                      –   4 டேபிள்ஸ்பூன்

மைதா மாவு                     –   1/2 கிலோ

எண்ணெய்                       –   பொரிக்க தேவையான அளவு

உப்பு                                     –   தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் பாதித் தேங்காயை துருவி கொண்டு பாதி தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
  • அடுத்ததாக பொரிகடலை சிறிது பொடித்துக்கொள்ளவும்.
  • சீனியை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் நெய் விட்டு அதில் முந்திரியை போட்டு நன்றாக வறுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • பாத்திரம் ஒன்றில் மைதாமாவு, தேங்காய்பால், தேவைக்கேற்ப உப்பு, சீனி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதம் வரும் வரை நன்றாக கரைத்துக்கொள்ளவும்.
  • அதனுடன் துருவி வைத்துள்ள தேங்காயும் பொடித்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து மேலும் கலக்கவும்.
  • பின்னர் கலவையுடன் வெட்டி வைத்துள்ள முந்திரி பொடியாக்கி வைத்துள்ள சீனி மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.
  • ஒரு மணி நேரம் காத்திருந்து சிறிய உருண்டைகளாக பிடித்து மைதா மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  • பொரிகடலை பணியாரம் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *