ஆக்ரோஷமாக வீசிய புயல்…. 23 பேர் பலி…. நிலைகுலைந்த அமெரிக்கா….!!!!

அமெரிக்க நாட்டில் மிசிசிப்பி மாகாணத்தில் நேற்று கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் சரிந்து விழுந்தது. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக புயல் கரையை கடக்கும்போது 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் சாலையில் உள்ள பதாகைகளும் வீட்டின் மேற்ககூரைகளும் காற்றில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் புயலால் இதுவரை 23 பேர் உயிரிழந்தும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இதனை அடுத்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் துரித நடவடிக்கையில் செயல்பட்டு வருகின்றனர்.