பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு…. புதிய முல்லையால்…. புதிய பிரச்சினை…!!

கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரனுக்கு தற்போது புதிய பிரச்சினை உருவாகியுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலைவழக்கில் அவருடைய வருங்கால கணவர் ஹேமந்த் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த நாடகத்தில் அவருடைய முல்லை கதாபாத்திரத்திற்கு தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவாக நடித்த காவியா புது முல்லையாக நடித்து வருகிறார்.

என்னதான் புதிதாக முல்லையாக ஒருவரைக் கொண்டு வந்திருந்தாலும், கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த குமரன் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா ஜோடிகள் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டன. மேலும் குமரனுக்கு புதிதாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா உடன் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு ஏற்படும் என்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.