“ரூபாய் 20 ஆயிரம் பணம் வேண்டும்” வசமாக சிக்கிய ஊராட்சி செயலாளர்…. கைது செய்த போலீஸ்….!!!

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் சங்குபுரம் பாண்டியன் நகரில் கூலித் தொழிலாளியான பாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டுவதற்காக ஊராட்சி அலுவலகத்தில் மனு வழங்கியதை தொடர்ந்து ஆணை வந்துள்ளதாக பாண்டியனுக்கு பஞ்சாயத்து அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பயனாளி பாண்டியனை தொடர்புகொண்ட ஊராட்சி செயலாளர் முருகையா புதிய வீடு கட்டுவதற்கான அணையை ஆய்வு செய்து உறுதிப்படுத்தி வழங்குவதற்காக தனக்கு லஞ்சமாக ரூபாய் 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் பணம் கொடுக்க விரும்பாத பாண்டியன் நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். எனவே லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் 20 ஆயிரத்தை முருகையாவிடும் கொடுக்குமாறு கூறினார். அதன்படி பாண்டியும் முருகையாவின் வீட்டிற்கு சென்று பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விரைந்து சென்று முருகையாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *