பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? – திமுகவை கிண்டல் செய்த எச்ராஜா …!!

பாஜகவின் தேசிய செயலாளர் பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? என்று பதிவிட்டு திமுகவை கிண்டல் செய்துள்ளார்.

பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சையாக பேசியதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது  பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா  வரவேற்பு தெரிவித்தார்.  அதே நேரம் திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு கண்டனம் தெரிவித்தார்.

அதில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எதிராக ஆர்.எஸ் பாரதி புகார் கொடுத்ததையடுத்து அவர் மீது இந்த பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், நள்ளிரவு கைது நாடகங்களை பார்த்து எல்லாம் திமுக மிரளாது,  நடுங்காது. இந்த மாபெரும் மக்கள் இயக்கம் பனங்காட்டு நரி. எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகள் சலசலப்புக்கு என்றைக்கும் அஞ்சாது என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் அண்மையில் தலைமைச் செயலாளரை சந்தித்து விட்டு, தலைமைச் செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல நடத்துகின்றார் என்று தயாநிதிமாறன் கூறியதற்காக  அவர் மீது பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில் எம்பிக்கள் டி ஆர் பாலு மற்றும் தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து, கைது செய்யக்கூடாது என முன்ஜாமீன் பெற்று வந்தனர். இதற்க்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா,ஆமாம் பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *