நாங்க போலீஸ்.‌… வசமாக சிக்கிய 2 பேர்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

வடமாநில வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லுட்புர் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லுட்புர் ரகுமான் தனது வேலை முடிந்ததும் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவரிடம் இரண்டு பேர் வழிமறித்து நாங்கள் இருவரும் போலீஸ் நீ கஞ்சா வைத்திருக்கிறாயா என கேட்டுள்ளனர். அதன்பின் மொழி தெரியாத லுட்புர் ரகுமான் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அதன்பின் அவர்கள் இருவரும் ரகுமானை பிடித்து இருசக்கர வாகனத்தில் அமர வைத்து அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் அழைத்து சென்று சோதனையிட்டு விட்டு அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து கையில் பணம் இல்லாததால் போனில் கூகுள் பே மூலம் 5000 ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்துள்ளார். இது பற்றி அவர் தன்னுடைய நண்பரான சிவராம் என்பவருக்கு தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சதீஷ்குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் காவல்துறையினர் எனக் கூறி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *