“அதே இடத்தில் வையுங்க” அகற்றப்பட்ட பனைமரம்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

அனுமதி இன்றி பனைமரத்தை அகற்றியதால் பசுமைப்புரட்சி அறக்கட்டளை சார்பாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயுடு வட்டம் பகுதியில் தனியார் தொலைபேசி நிறுவனம் அமைப்பதற்காக கேபிள் வயர் புதைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு செட்டிகுட்டை பகுதியில் ஒரு பனைமரத்தை அனுமதியின்றி அடியோடு அகற்றி இருகின்றனர். இதை அப்பகுதி மக்கள் கேட்டதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அனுமதி கொடுத்து தான் நாங்கள் அகற்றினோம் என பணிபுரிபவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பனைமரத்தை வெட்ட தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட மரம் சட்டத்தில் பனைமரமும் இருக்கிறது.

எனவே உயர் அதிகாரிகள் இதனை பார்வையிட்டு சம்பந்தப்பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பசுமைப்புரட்சி அறக்கட்டளை சார்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து கலெக்டர் உடனடியாக திரும்பவும் அதே இடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட பனை மரத்தை நட செல்போன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக 2 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு திரும்பவும் அதே இடத்தில் பனைமரம் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *