அதிமுக – பாமக இடையே வார்த்தை போர் முற்றிவரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிர்வாகி வழக்கறிஞர் பாலு, பாட்டாளி மக்கள் கட்சியினுடைய செல்வாக்கு என்ன ?  தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பலம் என்ன ? என்பது எல்லோருக்குமே நன்றாக தெரியும். மீண்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அண்ணா திமுக எப்போதெல்லாம் விழுந்து கிடந்தது அப்போது அது மீண்டும் உயிர் பெறுவதற்கு காரணமாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியை மறந்துவிடக்கூடாது. இருவரும் பலன் பெற்றிருக்கிறோம். கூட்டணியுடன் உடன்படிக்கை தொகுதியுடன் படி,  கூட்டினில் சேர்ந்திருக்கக்கூடிய கட்சியை பற்றி இது போன்ற கருத்துக்கள் சொல்வது என்பதை ஜெயக்குமார் அவர்கள் தவிர்க்க வேண்டும்.

அவர்கள் கட்சிக்குள் இருக்கக்கூடிய குழப்பங்களை தீர்க்க வேண்டும். அண்ணா திமுக கட்சி குழப்பமும் தொடர்பாக ஏன் நீதிமன்றத்திற்கு போறாங்க ? ஏன் தேர்தல் ஆணையத்தில் பல அறிக்கைகள் வருகிறது. அங்கே நடக்கக்கூடியது என்ன ? ஆனால் இதையெல்லாம் நாங்கள் தவிர்த்து வந்தோம். இதை பேசி நினைவூட்ட வேண்டிய இடத்திற்கு நாங்கள் வருவதற்கு காரணமாக இருந்தது ஜெயக்குமார் அவர்கள் என தெரிவித்தார்.