ஆனந்த காவேரி கால்வாயில் கிடக்கும் பனை மரங்கள்… விவசாயிகள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் ஒன்றியத்தில் பூதலூர் ஆனந்த விநாயக கோவில் அருகே ஆனந்த காவேரி கால்வாய் அமைந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசனம் பெறும் ஆனந்த காவிரி கால்வாயில் பூதலூர் பாலத்தின் கீழ் நீரோட்டத்தை தடுக்கும் விதமாக மூன்று பனை மரங்கள் வேரோடு பிடுங்கிப் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தண்ணீர் பாசனத்திற்கு சென்று கொண்டிருந்த இந்த பனை மரங்கள் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்க கால்வாய் குறுக்கே கிடக்கும் பனை மரங்கள் காரணமாக இருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் குறுக்கே கிடக்கும் பனைமரங்களை மேட்டூர் அணை திறப்பிற்கு முன்பாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.