பள்ளி சீருடை அணிந்து… சட்டப்பேரவைக்கு சென்ற தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்… இதுதான் காரணம்….!!!!

புதுச்சேரி சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரானது இன்று காலை துவங்கியது. இந்நிலையில் சட்டப் பேரவைக்கு வருகை புரிந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவர்களைப் போன்று சீருடை அணிந்தும், புத்தக பை மாட்டிக்கொண்டும், ஐ.டி. கார்ட் மாட்டிக்கொண்டும் சைக்களில் ஊர்வலமாக வந்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதாவது, பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் சைக்கிள் வழங்காததை கண்டித்து இவ்வாறு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து சட்டப் பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாகவும், பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகாததால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.