பாலிவுட்- டோலிவுட் இணைந்தால்…. 400 அல்ல ரூ.4000 கோடி வசூல்… சல்மான் கான் ஸ்பீச்….!!!!

மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த படம் லூசிபர். இந்தத் திரைப்படம் தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இந்தியில் சிரஞ்சீவியுடன் சல்மான் கான் நடித்துள்ளார். சல்மான் லூசிபர் படத்தில் பிரித்திவிராஜ் நடித்த கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும் நடித்துள்ளார். மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தை தமன் இசையமைத்து நிரவ் ஷா ஒழிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் நாளை 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சல்மான்கான் கூறியது, உங்கள் படங்கள் இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆனால் எங்கள் படங்கள் அங்கே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு தெற்கு நட்சத்திரம் தேவை. நாங்கள் உங்களை அழைத்துச் செல்ல வந்துள்ள வந்துள்ளோம். மக்கள் ஹாலிவுட் செல்ல விரும்புகிறார்கள். நான் தென்மாநிலங்களுக்கும் செல்ல விரும்புகிறேன். பாலிவுட்- தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால் அதிக ரசிகர்களுக்கு படம் சென்று சேரும். அதாவது சிரஞ்சீவி ரசிகர்கள் என் படத்தையும், என் ரசிகர்கள் சிரஞ்சீவி படத்தையும் பார்ப்பார்கள். நாம் ரூ.300-400 கோடி வசூலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பாலிவுட், தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால் எளிதாக ரூ.3000-4000 கோடியைஎட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.