பழைய சாதம்-முட்டை சாப்பிட்ட மாணவன்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பழைய சாதம்-முட்டை சாப்பிட்ட மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல லட்சுமிபுரம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரஞ்சித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி கனகலட்சுமி மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகிய இருவரும் பழைய சாதமும், முட்டையும் சாப்பிட்டுள்ளனர். அதன்பின் நள்ளிரவில் திடீரென இருவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தாய், மகனுக்கு ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கனகலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் தாய்-மகன் சாப்பிட்ட உணவு ஒவ்வாமை காரணமாக மாணவன் உயிரிழந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரஞ்சித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு தான்  இறந்ததற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *