டேட்டிங் ஆப் மூலம்…. பல பெண்களை தன் வலையில் சிக்க வைத்த…. 69 வயது காதல் மன்னன்….!!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் நெல்சன் கவுன் என்ற 69 வயதுடைய நபர் ஒருவர் வசித்து வருகின்றார். இவர் பல பெண்களுடன் டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி அரட்டை அடித்துள்ளார். அதோடு அவர் அந்தப் பெண்களை நேரில் சந்தித்து ஆசை வார்த்தைகளை கூறி தனது வலையில் சிக்க வைத்து பணம் பரித்துள்ளார்.

மேலும் அவர் தனது பெயரை மாற்றி தாம் ஒரு வியட்நாம் போர் வீரன், ஓவியங்களை விற்பனை செய்பவர், தொழில் தொடங்க இருப்பதாகவும், தனக்கு கேன்சர் இருப்பதாகவும், கூறி பெண்களிடம் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகாரில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நெல்சன் கவுன் தற்போது போலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விசாரணையில் அவர் கடந்த 2012 முதல் தற்போது வரை ஏமாற்றிய பெண்களிடம் இருந்து கிட்டத்தட்ட 21 ஆயிரம் டாலர் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.