“பாகிஸ்தானுடன் இதைத்தான் விரும்புகின்றோம்”…. மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய துணை தூதரின் பேச்சு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் லாகூர் பகுதியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாகிஸ்தானுக்கான இந்திய துணை தூதர் சுரேஷ்குமார் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது “இந்தியா எப்போதும் பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்பும்.

இதற்கு காரணம் நமது புவியியல் அமைப்பை நம்மால் மாற்ற முடியாது என்பதுதான். பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்திய போதும் இந்தியா அதனை ஒருபோதும் நிறுத்தவில்லை. மேலும் உறவுகளை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முதன்மை நடவடிக்கை வர்த்தக உறவுகளை சீராக்குவது தான்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply