பாக்.பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு வாலிபர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து பாகிஸ்தான் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலளித்த இந்தியா காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவதாரம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரைக்கும் எடுத்து சென்றது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயற்சி தோல்வி அடைந்தது இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா உள்பட பல நாடுகள் தங்களது கருத்தை கூறின.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு பாகிஸ்தான் நாட்டு மக்களை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக குரல் எழுப்ப பரப்புரை செய்து வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்து கேட்பில் காஷ்மீர் விவகாரம் பற்றி அங்குள்ள வாலிபர் ஒருவர் பதிலளித்தார். அவர் கூறியதாவது, பொருளாதாரத்தில் இந்தியாவை பாகிஸ்தான் என்று வீழ்த்துகிறதோ அன்று தான் அந்நாட்டின் குரலை உலக நாடுகள் கேட்கும் என கூறினார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்துவதை விட பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடவேண்டும் எனவும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து அனைவரது ஈர்ப்பையும் பெற்று வைரலாகி வருகிறது.