இந்தியாவுக்கு போங்க ”வர்த்தகமும் வேண்டாம்” பாகிஸ்தான் தீடிர் முடிவு ..!!

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

Image result for india pakistan

 

இந்நிலையில்  இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாகவும் , இந்தியாவுடன் வர்த்தக உறவை முறித்துக் கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கான தூதரை டெல்லிக்கு அனுப்பப் போவதில்லை என்றும் சொல்லப்படுகின்றது.இந்த முடிவு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.