பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல்…. இந்திய எல்லையில் பரபரப்பு…..!!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றது. இந்தநிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜவுரி மாவட்டத்தின் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் தீடிரென தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர்  இந்திய எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களை நோக்கி பீரங்கி குண்டுகள் மூலமாக  தாக்குதல் நடத்தினர்.

இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் உரிய பதிலடி தாக்குதல் கொடுத்தது. மேலும் பாகிஸ்தான் ராணுவம் 3 முறை நடத்திய இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏற்கனவே நேற்று முன்தினம் மாலையில் பூன்ச் மாவட்டத்தின் பகுதியில்  பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் காயம் அடைந்ததாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.