”பாகிஸ்தான் தூதர் திரும்ப அழைப்பு” பாகிஸ்தான் தீடிர் முடிவு …!!

இந்திய நாட்டிற்க்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

Image result for india pakistan

இந்நிலையில்  இந்தியாவுக்கான பாகிஸ்தான் நாட்டின் பொறுப்பு தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் நாடு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய நாட்டிற்க்கானபாகிஸ்தானின் புதிய தூதர் வருகின்ற 16_ஆம்தேதி பொறுப்பேற்க இருக்கின்ற நிலையில் பாகிஸ்தானின் இந்த உத்தரவு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.