“உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்” சவுரவ் கங்குலி கருத்து..!!

உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு  பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

2019 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ஆம் தேதி இங்கிலாந்து மாற்றும் வேல்ஸில் தொடங்க உள்ளது. இப்போட்டி தொடங்குவதற்கு சில நாட்களே உள்ளது.  இதற்காக ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி வெல்வதற்கு  வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Image result for pakistan 2019 world cup teamஇது தொடர்பாக பேசிய இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்  கங்குலி, பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளது. அந்த அணி இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த  சாம்பியன்ஸ் கோப்பையையும், 2009ம் ஆண்டு டி20 உலக  கோப்பையையும் வென்றுள்ளது என்றும் குறிப்பிட்டு கூறினார்.