பாகிஸ்தான் தீவிரவாத தலைவர் மசூத் அசார் இன் சொத்துக்கள் முடக்கம்

ஜெய்ஸ்ரீ முகம்மது அமைப்பின் தலைவரான மசூத் அசார் அவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது

சில வாரங்களுக்கு முன்பாக காஷ்மீருக்கு அருகில் pulwama என்னும் பகுதியில் நமது துணை ராணுவ படையினர் மீது பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் நமது துணை ராணுவ படையினர் 40-க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர் இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் நடத்தியது

மேலும் பல உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து  பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ஐநா சபையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்றும் அதில் உள்ள தலைவர்களையும் தீவிரவாதிகளையும் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் அவர்களது பெயரை இணைக்க வேண்டும் என்று பல உலக நாடுகள் கோரிக்கை வைத்தனர் இதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டது

இந்நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினரின் தலைவர் மசூத் அசார் அவர்களின் வங்கிக் கணக்கையும் சொத்துக்களை முடக்குவதற்கு பிரான்ஸ் அரசு முடிவு செய்து உள்ளது ஐநாவின் வேண்டுகோளுக்கு இணங்க இதனை அரசு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது