போலி ஆதார் வைத்து உளவு பார்த்த அதிகாரிகள்….. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…!!

டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் உளவு பார்த்ததால் அவர்களது எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்க பாகிஸ்தானிடம் இந்தியா கூறியுள்ளது 

டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த 2 பேர் உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் தாங்கள் இந்தியர்கள் என்று கூறி அவர்களது ஆதார் அட்டையை காட்ட அது போலியானது என கண்டறியப்பட்டது. பின்னர் அவர்களே பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ  ளவு அமைப்பின் உத்தரவை தொடர்ந்து உளவு பார்த்ததாக ஒப்பு கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டனர். பின்னர் பாகிஸ்தான் தூதரகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களை விடுவித்து 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மறுத்ததோடு டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பதற்காகவே இந்திய அரசு செயல்படுவதாகவும் கூறியுள்ளது. இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரக மூத்த அதிகாரியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு இந்திய தூதரக ஊழியர்கள் மீதான துன்புறுத்தலையும் கண்காணிப்பையும் பாகிஸ்தான் அதிகரித்துள்ளது. மேலும் 2 இந்திய ஊழியர்களை கடத்தி சென்று துன்புறுத்தி அதன்பிறகு விடுவித்துள்ளது.

இந்நிலையில் ஏழு நாட்களுக்குள் இரண்டு நாடுகளிலும் தூதரக ஊழியர்களை 50% குறைக்கும் திட்டம் செயல்படுத்த இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் 50 சதவீதம் பேரை குறைத்துக்கொள்ள பாகிஸ்தானிடம் கோரப்பட்டுள்ளது. இதேபோன்று பாகிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் ஊழியர்களும் குறைக்கப்படவுள்ளனர். இந்த திட்டம் ஏழு நாட்களுக்குள் செயல்படுத்தப்பட இருப்பதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், பாகிஸ்தானை சேர்ந்த தூதரக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகள் மற்றும் உளவு நடவடிக்கைகள் ஆகியவற்றை பாகிஸ்தான் அதிகாரிகள் பற்றி இந்தியா பலமுறை தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. வியன்னா மாநாடு மற்றும் தூதரக அதிகார, இராஜதந்திர அதிகாரிகளை நடத்தியது குறித்த இருதரப்பு ஒப்பந்தங்களுடனும் ஒத்துப்போகவில்லை. மாறாக இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்பாக இருக்கிறது. துப்பாக்கி முனையில் இரண்டு அதிகாரிகள் அண்மையில் கடத்தப்பட்டு மோசமாக நடத்தப்பட்டது பாக்கிஸ்தான் எந்த அளவிற்கு சென்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றது” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *