பாகிஸ்தானின் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி …. 32 பேர் காயம் …!!

பலுசிஸ்தான் மாகாணத்தில மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகி 32 பேர் காயமடைந்துள்ளனர்.

வடமேற்கு மாநிலமாக இருக்கக்கூடிய பலுசிஸ்தான் தலைநகரம் குச்லாக் பகுதியில் இருக்க கொடிய மசூதியில் போலீஸ் வாகனத்தை குறி வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 உயிரிழப்பதாகவும் 32 பேர் காயமடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Image result for Bombing in Balochistan province

பலுசிஸ்தான் பகுதி ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். தலிபான் இயக்கம் வலுவாக இருக்க கூடிய பகுதியாகும். இங்கு இருக்கும் தாலிபான்களை பாகிஸ்தான் இராணுவமும், பாகிஸ்தான் போலீசாரும் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்க்கு காரணமானவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டுமென்ற அடிப்படையில் இந்த தாக்குதல் அரங்கேறுள்ளதாக பார்க்கப்படுகின்றது.