இந்திய ராணுவ மூத்த தளபதி கூறுவது கனவு…. அவரின் பேச்சு மாயை…. பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கை…!!!

பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை ஆக்கிரமிக்க தயார் என இந்தியாவின் ராணுவ மூத்த தளபதி தெரிவிப்பது மாயை எனக் கூறியுள்ளது.

பாதுகாப்புத்துறை மந்திரியான ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன, இஸ்லாமாபாத் அதற்கான விலையை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து சமீபத்தில் இந்திய ராணுவ வடக்கு பிரிவு தளபதியான உபேந்திர திவேதி தெரிவித்ததாவது, இந்திய அரசின் எந்த உத்தரவையும் செயல்படுத்துவதற்கு இந்திய ராணுவம், தயார் நிலையில் இருக்கிறது.

காஷ்மீரின் மீதிப்பகுதியை கைப்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதற்கும் நாங்கள் தயார் தான் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பு பிரிவு இதற்கு பதிலடியாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய ராணுவத்தின் மூத்த தளபதி கூறுவது கனவு போன்றது. அவரின் கருத்து ஒரு மாயை என்று கூறி இருக்கிறது.