திடீரென ஏற்பட்ட மோதல்…..வன்முறையில் இறங்கிய தீவிரவாதிகள்…. பிரபல நாட்டில் நீடிக்கும் பதற்றம்….!!

பாகிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 3 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஐ.எஸ் எனப்படும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் போலீசார் மற்றும் தெஹ்ரீக் ஈ லப்பைக் என்ற தீவிரவாத அமைப்பின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் தீவிரவாதிகள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் 3 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதில் காயமடைந்த போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *