பகத்சிங் இறுதி சடங்கு… வைரலாகும் புகைப்படங்கள்… பெரும் பரபரப்பு…!!!

சமூக வலைத்தளங்களில் பகத்சிங்கின் இறுதி சடங்கு புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் விடுதலைக்காக பலர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அதில் இந்தியாவின் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை பாடுபட்ட அதாவது 1931  ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி 90 ஆண்டுகளுக்கு முன்பு பகத்சிங் சுக்தேவ் மற்றும் ராஜ்குரு இவர்கள் மூவரையும் பிரிட்டிஷ் அரசு பாகிஸ்தானில் உள்ள லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிட்டனர்.

இவர்களின் இறந்த தினம் நாடு முழுவதும் கடந்த வாரம் அனுசரிகப்பட்டது.மேலும் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி நிற்கும் கருப்பு வெள்ளை புகைபடங்களை  பகத்சிங் சுகதேவ் ராஜகுரு ஆகிய மூவரின் இறுதி சடங்கின் போது எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பெருமளவில் பரவி வருகிறது.

ஆனால் இந்தப் புகைப்படத்தை ஆய்வு செய்து பார்த்தபோது இது 1978 ஆம் ஆண்டு அமிர்தசரஸில் நடைபெற்ற மோதலின்போது 13 சீக்கியர்கள் இறந்ததற்காக செய்யப்பட்ட இறுதி சடங்கு என்றும் மேலும் இந்த புகைப்படம் 2012 ஆம் ஆண்டிலிருந்து சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும்  கூறினார்.இதனைத் தொடர்ந்து இந்த மாதிரியான போலியான செய்திகளை பகிர்வது மிகவும் தவறான செயலாகும் போன்ற போலீஸ் செய்திகளால் பல சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.