PAK VS BAN : வெற்றியை நோக்கி பாக். அணி …..! 4-ம் நாள் ஆட்ட முடிவில் 109/0 …!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்துள்ளது.

வங்காளதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 330 ரன்கள் எடுத்தது.இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்தது. இதனால் 44 ரன்கள் முன்னிலையில் வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் 2-வது இன்னிங்சில் வங்காளதேச அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹின் அப்ரிடி  5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதன்பிறகு 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபித் அலி – அப்துல்லா ஷபிக் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் .இதனால் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் குவித்துள்ளது .இதில் அபித் அலி 56 ரன்னும் , அப்துல்லா ஷபிக் 53 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *