#PAK VS BAN 2-வது டெஸ்ட் : சஜித் கான் அசத்தல் பந்துவீச்சு …..! தொடரை வென்றது பாகிஸ்தான் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது .

பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது  .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனிடையே பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .ஆனால் மழை காரணமாக முதல் 3  நாட்கள் போட்டி  பாதிக்கப்பட்டது .இதையடுத்து 4-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 300 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட் இழந்து திணறியது இதனால் 4-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 76 ரன்னில் சுருண்டது. இதையடுத்து       5-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் வங்காளதேச அணி 87 ரன்னில் ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சஜித் கான் 8 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன் பிறகு பாகிஸ்தான் அணி ,வங்காளதேசத்தை  பாலோவ் ஆன்  செய்ய அழைத்தது . தொடர்ந்து  2-வது இன்னிங்ஸில்  வங்காளதேச அணி 10 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்து  தோல்வி அடைந்தது .இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *