”பெண்களுடன் தொடர்பு” மன்னிப்பு கேட்ட பா.க் கிரிக்கெட் வீரர் ….!!

பல பெண்களுடன் தொடர்பு விவகாரத்தில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் சுற்றுடன் வெளியேறியது . அந்த அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் மட்டும் அணியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்_கின் மருமகனான சமீபத்தில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்த ஒரு சர்சையில் சிக்கினார்.  இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சர்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட  இளம்பெண் ஒருவர் இமாம் உல் ஹக் தனக்கு அனுப்பிய சில மெசேஜ்களை ME TOO ஹாஷ்டாக்_குடன் பதிவிட்டது  இமாமின் சர்சையை உறுதிப்படுத்தியது. மேலும் இமாம் உல் ஹக் தன்னை காதலிப்பதாக கூறி பேசி வருவதாகவும் , தன்னுடன்  சாட்டிங் செய்த ஸ்கிரீன் சாட்டுக்களையும் வெளியிட்டிருந்தார். இது குறித்து அமைதியாக இருந்து வந்த இமாம் உல் ஹக் மன்னிப்பு கேட்டடுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.