தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக சூரி இருக்கிறார்.  இவர் சமீப காலமாக ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் பரோட்டா சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது ஏழு கடல் ஏழுமலை, மாமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சுவர்களில் நிறங்களை பதித்தேன் இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அதற்கு எதிரே புதிதாக கட்டப்பட்டிருந்த கட்டிடத்திற்கு பெயிண்டர் ஒருவர் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அதனை வீடியோவாக பதிவு செய்த சூரி தான் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பாக இந்த வேலை தான் பார்த்து வந்ததை அவர் நினைவுகூர்ந்து உள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Actor Soori (@soorimuthuchamy)